பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து சமூகநீதி குறித்த உறுதிமொழி எடுத்தார்
தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி பெரியார் 145வது பிறந்தநாளை யொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், ரவீந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, தொழிற்சங்க மண்டல செயலாளர் முருகன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி சங்கரநாராயணன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், சிறுபான்மை அணி துணைத்தலைவர் செய்யது காசிம், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, வக்கீல் மாலாதேவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ஜெயசிங், வட்டசெயலாளர்கள் ராஜாமணி, கருப்பசாமி, சதீஷ்குமார், சுப்பையா, கதிரேசன், கீதாசெல்வமாரியப்பன், பாலகுருசாமி, பொன்னுசாமி, சிங்கராஜ், மூக்கையா, நிர்வாகிகள் கருனா, பிரபாகர், லிங்கராஜா, ஜோஸ்பர், வேல்பாண்டி, மகேஸ்வரசிங், குமார், சிவசுந்தர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு அறிவித்தப்படி சமூகநீதி நாளாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்ததையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதி குறித்த உறுதிமொழியை பெரியார் சிலை முன்பு எடுத்துக் கொண்டனர்.