Onetamil News Logo

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116வது பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்  மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116வது பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்  மாலை அணிவித்து மரியாதை 


நாகர்கோவில் 2020 செப் 28 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116வது பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக அரசின் சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116வது பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
 நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:
தமிழக மக்களால் போற்றப்படுகின்ற அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள்  அம்மா அவர்களின் வழியிலே நல்லாட்சி நடத்துகின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி இன்றைக்கு  சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பாமரனும் தமிழ் படிக்க வேண்டும். படிக்காத பாமரனும் தமிழ் படிக்க எளிய நடயிலே  தினத்தந்தி நாளிதழை தொடங்கி சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் தன்னுடைய எளிய நடையால் சொந்த உழைப்பால் தானாக அந்த காலத்திலே மையை வைத்து அவர்கள் கைப்பட எழுதி தினத்தந்தி நாளிதழை தொடங்கி நடத்தினார்கள்.  இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலே நம்பர் 1 நாளிதழாக தினத்தந்தி இருக்கிறது.  
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களில் வழியிலே திராவிட இயக்கத்திலே பணியாற்றி நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து சட்டபேரவை தலைவராக பேரறிஞர் அண்ணா அவர்கள் அமைச்சரவையிலே சட்டப்பேரவை தலைவராகவும், ஒன்றாக இருந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியிலே கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களின் அன்பை பெற்றவர். அசைக்கமுடியாத சக்தியாக அரசியலில் விளங்கியவர். ஆன்மிக செம்மல், கொடைவள்ளல் உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர். தினத்தந்தி நாளிதழ் என்று சொன்னால் அது கடைக்கோடி தமிழனுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழனுக்கும் பத்திரிகையை வழிகாட்டியவர், பத்திரிக்கை உலகில் சாம்பவான் என்று சொன்னால் இந்தியாவிலேயே  சி.பா.ஆதித்தனார்தான். அதற்கு அடையாளமாகத்தான் மாண்புமிகு அம்மாவின் அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவரது தமிழ் உணர்வை, தமிழ் தொண்டை மதிக்க வேண்டும், அவரது புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்று பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo