மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி ;ஊராட்சித் தலைவர் ஆர்.சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டிலிருந்து நடைபெற்ற 9 மைல் தூரம் நடைபெற்ற 7 ஜோடி பெரிய மாட்டுவண்டி போட்டியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். 7 மைல் தூரம் நடைபெற்ற 17 ஜோடி சிறிய மாட்டுவண்டி போட்டியை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில் தலைவர் வக்கீல் மாடசாமி, செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் சின்னமுத்து, திமுக ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம், திமுக கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், முனியசாமி, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், திமுக இளைஞர் அணி கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாட்டுவண்டி போட்டியையொட்டி தாளமுத்துநகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.