Onetamil News Logo

சிப்காட் பகுதியில் ஒருவர் கொலை -  எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த  சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பாராட்டு 

Onetamil News
 

சிப்காட் பகுதியில் ஒருவர் கொலை -  எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த  சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பாராட்டு 


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 26 ;சிப்காட் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை -  எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த  சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் 1 வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36) என்பவரும், தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பச்சை பெருமாள் மகன் லட்சுமணன் (47) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துகுமார் என்ற மதுரை முத்து (24) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாரிமுத்து வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் பொருட்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவரது நண்பர்கள் தான் அங்குவந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த மாரிமுத்து என்பவர் லட்சுமணனையும், முத்துகுமார் (எ) மதுரைமுத்துவையும் என் வீட்டில் ஏன் திருடினீர்கள் என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (25.02.2021) இரவு மாரிமுத்து மற்றும் அவரது சகோதரர் சின்னமுத்து ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ராஜகோபால் நகர் 4வது தெருவில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த லெட்சுமணன் மற்றும் முத்துகுமார் (எ) மதுரைமுத்து ஆகியோர் மாரிமுத்துவை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விமலா தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், முதல் நிலை காவலர்  நாசர் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோர் எதிரிகள் லெட்சுமணன் மற்றும் முத்துகுமார் (எ) மதுரைமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இசக்கிராஜா என்ற ராஜா என்பவர் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேற்படி வழக்கின் இரண்டு எதிரிகளை உடனடியாக கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo