Onetamil News Logo

திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி,கதிகலங்கும் அமைச்சராக இருக்கும்,24 மாவட்ட செயலாளர்கள் 

Onetamil News
 

திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி,கதிகலங்கும் அமைச்சராக இருக்கும்,24 மாவட்ட செயலாளர்கள் 


சென்னை 2021 ஜூலை 25 ; திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி
திமுகவில் குறுநில மன்னர்கள் போல மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எம்எல்ஏ, அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை அனுபவித்து வருகிறார்கள்.  மற்ற அரசியல் கட்சிகளில் அடிக்கடி மாவட்டச் செயலாளர்கள் மாறுவது. அடிக்கடி அமைச்சர்கள் மாறுவதும். அடிக்கடி எம்எல்ஏக்கள் மாறுவதும். நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை பல்வேறு நடவடிக்கைகளை விறுவிறுப்பாக நடத்திவருகிறார். இவரது கட்சியில் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், கூட முதலமைச்சர் போகின்ற வேகத்தைப் பார்த்தால் என்று முனுமுனுக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்கின்ற முனைப்போடு செயல்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக ஸ்டாலின் மகன் உதயநிதி விரைவில் அமைச்சராக வாய்ப்புகள் இருக்கிறது. என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது, உதயநிதி ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் உடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். எளிமையாக மக்களிடம் தொடர்பு கொள்கிறார். அவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. திமுக வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக உட்பட பல்வேறு மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணைந்து உள்ள நபர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிட திட்டம் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. திமுக அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட வேண்டும், என்பதற்காக ஸ்டாலின்,அமைச்சரவையில், அமைச்சராக இருக்கின்ற 24 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்கின்ற ஒரு கேள்வியானது பேசப்பட்டு வருகிறது. இதனால் 24 மாவட்ட செயலாளர்கள் 24 அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. திமுக அரசியல் கட்சியின் வளர்ச்சி முக்கியம் அதே நேரத்தில் பொது மக்களிடையே நல்ல பெயரை பெற்றிருக்க வேண்டும், என்பதற்காக நல்ல பல விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மாற்று கட்சியில் இருந்து நிர்வாகிகள், புதுமுகங்கள், இளைஞர்கள் என்று பலருக்கும் வாய்ப்புகள் வழங்க காத்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo