ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி,ஆட்டோ ரிக்ஸா வாகனங்களில் மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு
ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி,ஆட்டோ ரிக்ஸா வாகனங்களில் மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு
தூத்துக்குடி 2022 ஆகஸ்ட் 16 ; ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி,ஆட்டோ ரிக்ஸா வாகனங்களில் மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஸா வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோ ரிக்ஸா வாகனங்களிலும் கட்டணமாணி (Fare meter ) பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்கள்.