Onetamil News Logo

ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி, செல்சீனி காலனி பகுதியில் சூசைநாதர் மது போதை நோய் மறுவாழ்வு இல்லம்  அடிக்கல் நாட்டு விழா 

Onetamil News
 

ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி, செல்சீனி காலனி பகுதியில் சூசைநாதர் மது போதை நோய் மறுவாழ்வு இல்லம்  அடிக்கல் நாட்டு விழா 


 மதுபோதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல முறை கட்டுரை வெளியிட்டுள்ளோம்.ஆனால் அரசு சார்பில் கட்டப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்று செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில் நடைபெற்ற ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம்” அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
              தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில் தூத்துக்குடி மறைமாவட்ட சார்பாக, மறைமாவட்ட நூற்றாண்டு திட்டத்தின் இறைடியார் சூசைநாதர் ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்ல” அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
          தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளவர்களை ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் கண்டறிந்து அவர்களை இந்த குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங் மற்றும் தியானம் போன்றவற்றை அளித்து அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் நல்ல குடிமகனாக மாற்றுவதற்காக இந்த இல்லம் கட்டப்பட உள்ளது.
                இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், பெங்க;ர் செபமாலைதாசர் சபை உயர்தலைவர்  ஜஸ்டின் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
        இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவன் கோவில் குருக்கள் சிவகுமார், மணிகண்டன், வார்டு கவுன்சிலர் வைதேகி, பரதர் நலச் சங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
        இந்நிகழ்வில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம்,  மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர்கள்  சிவகுமார், முகிலரசன், முத்தமிழரசன், பயிற்சி உதவி ஆய்வாளர்  ராமலெட்சுமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர்  மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo