Onetamil News Logo

ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி, கோவில்பட்டியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை, சென்னை பயிற்சி இணை இயக்குனர் டாக்டர் மது சூதனன் தலைமையில் இன்று விசாரணை நடுநிலையாக இருக்குமா? 

Onetamil News
 

ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி, கோவில்பட்டியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை, சென்னை பயிற்சி இணை இயக்குனர் டாக்டர் மது சூதனன் தலைமையில் இன்று விசாரணை நடுநிலையாக இருக்குமா? 


கோவில்பட்டி 2021 அக்டோபர் 13 ; ஒன் தமிழ் நியூஸ் எதிரொலி, கோவில்பட்டியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா,கண்காணிப்பாளர் ராஜா குறித்து சென்னை பயிற்சி இணை இயக்குனர் டாக்டர் மது சூதனன் தலைமையில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை நடுநிலையாக இருக்குமா?  என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.                                                                                                          கோவில்பட்டி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு சென்னை பயிற்சி இணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணையில் ஒட்டநத்தம் உதவியாளர், கடம்பூர் கண்காணிப்பாளர், கீழ ஈரால் கண்காணிப்பாளர், நாகலாபுரம் கண்காணிப்பாளர், பெரிலோவன்பட்டி கண்காணிப்பாளர், தொழில்நுட்ப உதவியாளர், இரண்டாம் நிலை அதிகாரிகள் 6 பேர் தாய் சேய் நல அலுவலர், செவிலியர்கள், நேர்முக உதவியாளர், அலுவலக பணியாளர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் விசாரணையில் நேரில் ஆஜராகி பல்வேறு குற்றச்சாட்டுகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளின் படி 27 ஆண்டுகளாக பணி செய்து வரும் ராஜா இடமாற்றம் செய்யப்பட்டு அவர் மீது மேல் விசாரணை ,நடத்தப்படும் என்று தெரியவருகிறது. குறிப்பாக இவரை சஸ்பெண்ட் கூட செய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த அலுவலகம் பல்வேறு சிக்கல்களில் இருக்கின்றது இதை கண்டு உணராத துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் போஸ்கோ ராஜா இடமாற்றம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போஸ்கோ ராஜா மருத்துவ விடுப்பில் இருப்பதனால் அவர் இந்த விசாரணையில் ஆஜராக வில்லை அவர் குறித்த விசாரணையானது மற்றொரு நாளில் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, எது எப்படியோ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மமே வெல்லும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo