பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ
விருதுநகர் 2018 ஏப்ரல் 15 ;பல்கலைக்கழக பேராசிரியர்களின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube பார்க்கலாம்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பட்டம் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொழில் செய்தால் பெரிய இடத்திற்கு செல்லலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவி கணித வகுப்பு எடுத்து வருகிறார். இவர் தன்னிடம் படித்து முடித்த மாணவிகளுக்கு போன் செய்து அவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு வருமாறு மிகவும் ஜாக்கிரதையாக அழைக்கிறார். அதாவது மாணவிகளிடம் நேரடியாக விஷயத்தை கூறவும் கூடாது, ஆனால் அவர்களாகவே விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நிர்மலா தேவி மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.
மேலும் இத்தனை அழகாக பாலியல் தொழிலை போதிக்கும் இவர்கள் கல்வியை இந்த முறையில் போதித்திருந்தால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம் இதுபோல் பேச வேண்டிய அவசியமே இல்லையே. நானும் ஏற்கெனவே போயிருக்கிறேன், அதனால் பயப்படாதீங்க என்றும் நிர்மலா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளிடம் அழகாக பாலியல் கல்வியை போதிக்கும் அந்த ஆடியோவை நீங்களும் கேளுங்களேன்....