Onetamil News Logo

பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்துவுக்கு ஓ.என்.வி., விருதா? கேரளா நடிகை பார்வதி எதிர்ப்பு

Onetamil News
 

பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்துவுக்கு ஓ.என்.வி., விருதா? கேரளா நடிகை பார்வதி எதிர்ப்பு           


                                                                                                     
சென்னை 2021 மே 27 :  இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர்.ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு  இவர் மே 1931 – 13 பெப்ரவரி 2016 வரை வாழ்ந்து மறந்துவிட்டார். அவரது பெயரில் விருது வழங்கப்பட்டுவருகிறது.இவர் 2007ஆம் ஆண்டுக்கான உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருது பெற்றவர்  20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாதெமி விருது, சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.2007ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.ஓ.என்.வி என்று பரவலாக அறியப்படும் இவர் இடதுசாரி சிந்தனையாளர். 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் இடது சனநாயக முன்னணியின் சார்பாகப் போட்டியிட்டார்.  இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாளப் பல்கலைக்கழகம் வழங்கும் கவுரவமிக்க ஓஎன்வி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் இவ்விருது முதல் முறையாக கேரளாவைச் சாராத வேறு மொழி கவிஞருக்கு அளிக்கப்படுகிறது. 
    திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து ஓ.என்.வி., விருது பெறுவற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் விருது வழங்கப்பட்டதற்காக தனது வாழ்த்துக்களை வைரமுத்துவிற்கு தெரிவித்தார்.இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட்டதற்காக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை பார்வதி தனது டுவிட்டர் பதிவில்,‛ ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது.ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயியும் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்பட்டதை எதிர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo