Onetamil News Logo

எதிர் நோக்காத எதிரி ;எழுதியவர் ;- ஜெயராஜ் மணி ;அமேரிக்கா ;நியூ ஜெர்சி 

Onetamil News
 

எதிர் நோக்காத எதிரி ;எழுதியவர் ;- ஜெயராஜ் மணி ;அமேரிக்கா ;நியூ ஜெர்சி 


என் எதிரே அருகே
கருநாகம் இல்லை.
இரும்பு துப்பாக்கி இல்லை.
சிறு எதிரியும் இல்லை.
ஒரு துரும்பும் இல்லை.
இருந்தும் கொல்கிறான்.
என் கழுத்தில் கத்தி ஏறவில்லை.
என் உடல் பற்றி எரிய வில்லை.
என்னைச் சுற்றி கொடிய விலங்கில்லை.
என் ஊரில் குண்டு விழவில்லை.
என்னை பெருவெள்ளம்
கொண்டு செல்லவில்லை.
இருந்தும் அழிகிறேன்.
இடி மின்னல் தாக்கவில்லை.
அடி மிதியில் சிதைய வில்லை.
பஞ்சம் பட்டினி இல்லை.
பஞ்சு பட்டம் போல் காற்றென்னை
சுழற்றி வீசவில்லை.
இருந்தும் சாகிறேன்.
அவனை பார்த்ததில்லை
தேடினாலும் கிட்டவில்லை.
மாயமாய் மறைந்திருந்து
ஆயக் கலைகள் கற்றவனாய்
நேய உறவுகளை கொல்கிறான்.
எதிர் நோக்காத எதிரி,
கட்டிய மனைவியின்
அன்புக் கைகளில் இருக்கிறானா?
தொட்டு வணங்கும்
கடவுளின் கால்களில் இருக்கிறானா?
கட்டு கட்டாய் சேர்த்த
பணத்தாளில் படுத்திருக்கானா ?
எதில் இருக்கிறான்
எதிரி என்று தெரியாமல்
எதற்கோ சாகிறேன்.
விசா பாஸ்போர்ட் இல்லாமல்
நாடுகளில் குடியேறுகிறான்.
அசாதாரணமாய் இலகுவாய்
ஊர்களில் ஊடுருவுகிறான்.
அவன் கைக்கூலியாய்
எதிரியை நானே என்
கை விட்டு கைமாற்றுகிறேன்.
பை இல்லாமல் கடத்துகிறேன்.
விருந்தாளியாய் இல்லத்திற்கு
கையோடு அழைத்து போகிறேன்.
பெரும் பாதுகாப்பு படைகள்
பொறுப்பாய் தடுக்க வில்லை.
இவன் கைப்பிள்ளை
அணு ஆயுதம் இன்னும்
பால் குடியை மறக்கவில்லை.
சுட்டு வீழ்த்த துப்பாக்கி இல்லை.
கட்டிப் போட கயறு இல்லை.
தடை விதிக்க தடையமே இல்லை.
பில்லியன் டாலர் பணம் இருந்தும்
பில்லி சூனியம் வைத்தவனை
கொல்ல ஒரு திட்டம் இல்லை.
போர் ஏதும் இன்றி
யார் ஏவி விட்ட எதிரியோ,
என்னை வீட்டிற்குள்
சிறை வைத்தான்.
அணு அளவு என்றாலும்
அனுமதி இன்றி வந்திங்கு
நிம்மதியை குலைத்து விட்டான்.
அமைதியாக சத்தமின்றி
நம் விதியை மாற்றுகிறான்.
உருவிச் சென்று உயிர்களை
கிருமித்தனம் காட்டுகிறான்.
புலியாய் உறுமி நின்ற அரசுகளை
எளிதாய் கிருமி வென்றதே.
அழிக்க வந்த கிருமிப் போரை
விழிப்புடனே, பொறுப்புடனே,
தனித்திருந்து வெல்வோம்,
இனித் திரும்பாமல் கொல்வோம்.
#Coronavirus
#Covid19
#istayhome
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo