Onetamil News Logo

சுமார் ரூ.1.2 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் எஸ்.வடிவேல் குமார் & எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் P.முத்துவேல் கண்ணன் சஸ்பெண்ட் ;கலெக்டர் செந்தில்ராஜ் அதிரடி

Onetamil News
 

சுமார் ரூ.1.2 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் எஸ்.வடிவேல் குமார் & எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் P.முத்துவேல் கண்ணன் சஸ்பெண்ட் ;கலெக்டர் செந்தில்ராஜ் அதிரடி



தூத்துக்குடி 2023 செப் 22 ; சுமார் ரூ.1.2 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய ஓட்டப்பிடாரம் துணைவட்டாட்சியர் எஸ்.வடிவேல் குமார் & எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் P.முத்துவேல் கண்ணன் ஆகியோரை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் சஸ்பெண்ட் செய்துள்ளார்.                                                                                                            
           தூத்துக்குடிமாவட்டம்ஓட்டப்பிடாரம் வட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தில் உள்ள அரசு சர்க்கார் மனை நிலத்தினை அரசின் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் தன்னிச்சையாக வட்டக் கணக்கு மற்றும் நத்த நிலவரித்திட்ட தூய சிட்டா பதிவேட்டில் முறைகேடாக பதிவுகள் செய்து சுமார் ரூ.1.2 கோடி சந்தை மதிப்பிலான 40 சென்ட் நிலத்தினை விதிமுறைக்கு புறம்பாக நத்தம் பட்டா வழங்கியும்,கிராம நிர்வாக அலுவகத்தில் வைக்கப்பட வேண்டிய பதிவேட்டினை தனது வீட்டில் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டும் மேற்படி முறைகேடான பட்டாவிற்கு தூய நகல் பட்டா வழங்கியும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியரும் எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். என்பதுவிசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேற்படி முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணைவட்டாட்சியர் எஸ்.வடிவேல் குமார் மற்றும் எப்போதும்வென்றான் கிராமநிர்வாகஅலுவலர் P.முத்துவேல் கண்ணன் ஆகியோர்களை மாவட்டஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo