Onetamil News Logo

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை

Onetamil News
 

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை 


ஓட்டப்பிடாரம் 2019 ஏப்ரல் 24 ;இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.
                                 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி, வருகிற 29-ந்தேதி வரை நடக்க உள்ளது. 30-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறுதல், அன்று மாலை 3 மணிக்கு பின்னர் சின்னம் ஒதுக்கீடு, அதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
2-ந்தேதி முதல் முக்கிய பிரமுகர்கள் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் நேற்று மதியம் ஓட்டப்பிடாரம் வந்தார். அவர் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின் போது மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கசேகர், ஞானராஜ், அன்னபாலா, முத்துபாண்டியன், சண்முகவடிவு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo