Onetamil News Logo

காட்சிப் பொருளாக மாறிய இ சேவை மையம் ;மாவட்ட ஆட்சியரை ஏமாற்றும் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலர்கள்

Onetamil News
 

காட்சிப் பொருளாக மாறிய இ சேவை மையம் ;மாவட்ட ஆட்சியரை ஏமாற்றும் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலர்கள்


ஓட்டப்பிடாரம்  2019 அக்டோபர் 9 ; காட்சிப் பொருளாக மாறிய இ சேவை மையம் ;மாவட்ட ஆட்சியரை ஏமாற்றும் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலர்கள் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றார்கள்.
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில்  வட்டார அளவிலான இ சேவை மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும்  திறக்கப்படாமல் உள்ளதாக  கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி தினகரன் நாளிதழில் காட்சிப் பொருளாக மாறிய இ சேவை மையம் என்ற தலைப்பில் செய்தி வெளிவந்தது.
அன்றைய தினமே தடாலடியாக யூனியன் அலுவலர்கள், கம்யூட்டர் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை கொண்டு வந்து ஒரு பணியாளரை வரவழைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு இ சேவை மையம் செயல்படுவது போன்று  புகைப்படம் எடுத்து அனுப்பினர் 
ஓரிரு நாட்கள் கடந்த பின்பு அந்த அலுவலகத்தில் கம்யூட்டர் பிரிண்டர் பணியாளர் யாரும் தற்போது இல்லை.
நான் இன்று அந்த சேவை மையத்தை அனுகி கணினி வழி பட்டா எடுக்க சென்றேன். ஆனால் அச்சேவை மையத்தில் பணியாளர்களும் இல்லை கம்யூட்டரும் இல்லை வெற்று மேசைகள் மட்டுமே இருந்தது.
அதன் பக்கத்து அறையில்  இருந்த மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில் அவர்களிடம் நான் அதுகுறித்து கேட்டபோது, கணினி பழுதடைந்து விட்டதாக தெரிவித்தார்.
பணியாளர் எவரும் இதற்கென பணியமர்தப்படவில்லை, கணினி பிரிண்டர் இல்லை ஆனாலும் தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்திக்காக மையம் செயல்படுவது போல்  சோடிக்கப்பட்டவைதான் என தெரிய வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட கணினி பிரிண்டர்கள் குறித்து விரிவான  விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த இ சேவை மைய கட்டிடத்தின் முன்பகுதியில் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க என்னென்ன சான்றிதழுக்கு என்னென்ன ஆவணம் வேண்டும் என பொதுமக்கள் அறிந்திடும் வகையில் கட்டணங்கள் உள்ளிட்ட பல விபரங்களுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.
இந்த சேவை மையத்திற்கு என ஒரு பணியாளரை அதற்கான வேலை நேரத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி பொது சேவை மையங்கள் மக்களுக்கான சேவைகள் அளித்திட .மாவட்ட  ஆட்சியர்  நடவடிக்கை எடுத்திட ஓட்டப்பிடாரம் ஒன்றியம்,புதிய தமிழகம் கட்சி ,கப்பிகுளம் சு.பாபு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo