Onetamil News Logo

ஒட்டப்பிடாரம் விவசாயிகள் கவனத்திற்கு : தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.     

Onetamil News
 

ஒட்டப்பிடாரம் விவசாயிகள் கவனத்திற்கு : தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.       


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 25 ;வேளாண்மை பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண்மை எந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாடகை மையங்களை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வேளாண்மை பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்கள், கருவிகளை தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து விண்ணப்பத்தை அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மை அலுவலகத்தில் அளித்திட வேண்டும். பின்னர் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்த தொகையை சம்பந்தப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அதன்பின் உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர்
 தூத்துக்குடி  ;வேளாண் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஜாகீர் உசேனிடம் 9443694245 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 கோவில்பட்டி; உபகோட்ட உதவி செயற்பொறியாளர்
 பழனிசாமியிடம் 9442049591 என்ற எண்ணிலும், 
திருச்செந்தூர் ; உபகோட்ட  உதவி செயற்பொறியாளர் 
சங்கர்ராஜிடம் 9443157710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர்h சந்தீப்நந்தூரி தகவல்
 ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியுடன், கால்நடைகளான ஆடு- மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகிய உப தொழில்களை விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில், அவர்களை ஊக்குவித்து நிரந்தர வருமானம் பெற்றிடும் வகையில் நீடித்த நிலையான வேளாண்மை திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் 100 ஹெக்டேர் பரப்பில் ஓட்டப்பிடாரம் வட்டார பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற ஒரு ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு நிலம் வைத்திருப்பதோடு, ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்க்க போதுமான இடவசதி உள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள 50 சதவீதம் மானியமாக ரூ.25 ஆயிரமும், 2 கறவை மாடுகள் வாங்க 50 சதவீதம் மானியமாக ரூ.30 ஆயிரமும், 10 ஆடுகள் வளர்க்க ரூ.15 ஆயிரம் மானியமும், 20 நாட்டுக்கோழிகள் வளர்க்க ரூ.6 ஆயிரம் மானியமும், மண்புழு உரம் தயாரிக்க ரூ.12 ஆயிரத்து 500 மானியமும், தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்த 8 தேனீ பெட்டிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 800 மானியமும் என மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு வரையறுக்கப்பட்டு, பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வழங்கப்படும்.
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கால்நடை அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்குவது உறுதி செய்யப்படும். இந்த திட்டத்தினை செயல்படுத்த தோட்டக்கலை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் கொண்ட குழு மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவண நகல்கள், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல்கள் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo