Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்களை  அமைப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்களை  அமைப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதி


ஓட்டப்பிடாரம் 2018 அக் 10 ;ஓட்டப்பிடாரம் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்களை  அமைப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதி
ஓட்டப்பிடாரம் முப்புலிவெட்டி, மேலசுப்பரமணியாபுரம், தெற்கு ஆவாரங்காடு, மேட்டூர், மேலும் பல கிராமங்களில் நீர் வரத்து மற்றும் பொது பாதை, தனியார் சொந்த விவசாய நிலங்களில் அனுமதி பெறாமல் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்கள் அமைத்து வருவதால்; சுப்பிரமணியாபுரம் - சில்லாநத்தம் முக்கிய சாலையில் 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர். பகல் -இரவு நேரங்களில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓட்டப்பிடாரத்தை சுற்றி பல கிராமங்களில்;; விளை நிலங்களுக்கு விதைக்க செல்ல வழியின்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது காற்றாலை நிறுவனம். இதனால் பொதுமக்கள்; விதைக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். மேலும் காற்றாலை நிறுவனம் அருகில் உள்ள நீர்வரத்து பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். 
இது தொடர்பாக முப்புலிவெட்டி தங்கவேல் தெற்கு ஆவாரங்காடு பாண்டி, மேட்டூர் வேல்சாமி, சுப்பிரமணியாபுரம் சுடலைமாடன் போன்ற விவசாயிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் நட்டப்பட்டுள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo