Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜசேகர் சுப்பையா தலைமையில் பொங்கல் பொருள் வழங்கும் விழா

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜசேகர் சுப்பையா தலைமையில் பொங்கல் பொருள் வழங்கும் விழா


ஓட்டப்பிடாரம் 2018 ஜன 9 ; ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜசேகர் சுப்பையா தலைமையில் பொங்கல் பொருள் வழங்கும் விழா நடைபெற்றது.
                                                                                                                             பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி சர்க்கரை, முந்திரி பருப்பு, உலர்திராட்சை ரூ.1000, இலவச வேஷ்டி சேலைகள் வழங்க தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து குலசேகரநல்லூரில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழா கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜசேகர் சுப்பையா தலைமையில், தாசில்தார் காளிராஜ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஓட்டப்பிடாரம் முன்னால்சட்டமன்ற உறுப்பினர் மோகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, முப்புலிவெட்டி, கொ.தளவாய்புரம், கீழமங்கலம், வெள்ளாரம், க.தளவாய்புரம், லெட்சுமிபுரம் மேலும் பல கிராமங்களில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு சென்று பயனாளிகளுக்கு தாசில்தாரும், முன்னால் எம்.எல்.ஏ வும் மொத்தம் 96 கடைகளில் 33ஆயிரத்து 606 பயனாளிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பெரியமோகன், கருப்பசாமி, கண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் முருகன், மேரிபுஸ்பம், பொன்ராஜ், மாரிமுத்து, மற்றும் விற்பனையாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்;.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo