Onetamil News Logo

கணவனை கல்லால் தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட புதுமனைவி இன்று கைது         

Onetamil News
 

கணவனை கல்லால் தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட புதுமனைவி இன்று கைது         


புளியம்பட்டி  2019 செப் 8 ;கணவனை கல்லால் தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட புதுமனைவி இன்று கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கலியாவூர், காலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திருமணி மகன் பாஸ்கரன்(33). இவருக்கும் சிங்கத்தாகுறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த மஞ்சு (21)  என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் சிங்கத்தாகுறிச்சியில் கோவில் திருவிழாவுக்கு  பாஸ்கரன் தனது புது மனைவியான மஞ்சுவை அழைத்து வந்துள்ளார்.
 இந்த நிலையில்  மஞ்சுவுக்கு கருச்சிதைவு  ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாஸ்கரன் மற்றும் மஞ்சு ஆகியோருக்கும் கடந்த 06ம் தேதி அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு பாஸ்கரனை தவறாக பேசி கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பாஸ்கரன் தவறி கிணற்றுக்குள் விழுந்து உள்ளார்.
இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வன்  வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo