Onetamil News Logo

ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வக்கீல் பெண்கள் அணியினர் ஆர்வம் ;புதுமுக பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Onetamil News
 

ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வக்கீல் பெண்கள் அணியினர் ஆர்வம் ;புதுமுக பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?


ஓட்டப்பிடாரம் 2019 ஏப்ரல் 17 ;தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வக்கீல் பெண்கள் அணியினர் ஆர்வம் ;புதுமுக பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்த்துவருகின்றனர்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டப்பிடாரம் இரண்டாவது இடம் வகிக்கிறது. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தோகுதி இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனைத் தொடந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில்  வரும் இடைத்தேர்தலிலாவது ஓட்டப்பிடாரத்திற்கு விமோசனம் பிறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுவரை அதிகமுறை வெற்றிப்பெற்று ஓட்டப்பிடாரம் அதிமுக வின் கோட்டையாக உள்ளது.திமுக வேட்பாளராக அயிரவன்பட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய மேற்குச்செயலாளர் சண்முகையா கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுவிட்டார்.அதிமுக-வில் போட்டியிட முன்னால் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்,சேர்மன்கள் மற்றும் வக்கீல் அணியை சேர்ந்த பெண்கள் என கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இந்த முறை புதுமுக பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என ஓட்டப்பிடாரம் தொகுதி பெண் வாக்காளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.குறிப்பாக மாவட்ட வக்கீல் அணியை சேர்ந்த கங்கா ராஜசேகர் வக்கீலாகவும் நோட்டரி பப்ளிக்காகவும் இருந்து வருகிறார்.இவரது கணவர் ராஜசேகர் சுப்பையா வக்கீலாகவும் நோட்டரி பப்ளிக்காகவும் இருந்து வருகிறார்.இவரது சொந்த ஊர் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள குலசேகரநல்லூர் ஆகும்.இவர் ஏற்கனவே குலசேகரநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக இருந்து வருகிறார். இவர் தன் மனைவிக்கு அதிமுக வில் சீட் வாங்க காய் நகர்த்தி வருகிறார்.
இவருக்கு ஓட்டப்பிடாரம் பகுதி மக்களிடையே நல்லபெயரும் உள்ளது அதேபோல் ஓட்டப்பிடாரம் மறைந்த முன்னால் அவைத்தலைவர் தங்கராஜின் மகள் ஜெயலலிதா வழக்கறிஞராக இருந்து வருகிறார்.இவரும் அதிமுக வில் சீட் வாங்க காய் நகர்த்தி வருகிறார். .இதுபோல் வக்கீல் அணியை சேர்ந்த பல பெண்கள் சீட் வாங்க காய் நகர்த்தி வருகின்றனர். தற்போது வரை அதிமுக-வில் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் அதிமுக-வில் யாருக்கு சீட் கிடைக்கும் என ஓட்டப்பிடாரம் தொகுதி பெண் வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo