Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் அருகே கைவிடப்பட்ட குளம் தூர்வாறும் பணி மீண்டும் துவங்க அரசு அலுவலர்கள் ஆய்வு 

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் அருகே கைவிடப்பட்ட குளம் தூர்வாறும் பணி மீண்டும் துவங்க அரசு அலுவலர்கள் ஆய்வு       


 ஓட்டப்பிடாரம் 2018 ஆகஸ்ட் 9;அரசுக்கு சொந்தமான இடங்களிலும், புறம்போக்கு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் ஆங்காங்கே குளங்கள் தூர்வாரப்பட்டும் ஆழப்படுத்தப்பட்டும் வருகிறது. மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும், புறம்போக்கு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
   இதே போன்று ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குட்பட்ட குறுக்குசாலை, வேலாயுதபுரம்,பெரியநத்தம், சிந்தலக்கட்டை மற்றும் சுப்பிரமணியாபுரம் கிராம மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பெரியகுளத்தை தூர்வாரி தண்ணீர் தேக்கினால் குளத்தை சுற்றியுள்ள சுமார் 30 கிராம பொதுமக்கள் பயன்பெறுவர். இதனால் குளத்தை தூர்வார வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். மாவட்டஆட்சியர் மனுவை ஆய்வு செய்து ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் மூலம் குளம் தூர்வாருவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் சிலர் பணிகள் நடைபெறாவண்ணம் தடை போட்டு வந்தனர். இதனால் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு விவசாயத்திற்கு ஆதாரமாகும் குளத்தை தூர்வாருமாறு மனு கொடுத்திருந்னர். மனுவின் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் வட்டாச்சியர் ஜான்சன் தேவசகாயம், உதவி பொறியாளர் அப்துல்ரகுமான், முன்னால் சர்வேயர் மனோகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தனர். 
         மேலும் மதகு சரிசெய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகளும் ஆய்வின் அடிப்படையில் துறைரீதியாக மிக விரைவில் சரிசெய்து தரப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo