Onetamil News Logo

புதியம்புத்தூரில் பைப்லைன் கேட்டு சாலை மறியல்

Onetamil News
 

புதியம்புத்தூரில் பைப்லைன் கேட்டு சாலை மறியல்


ஒட்டப்பிடாரம் 2018 மே 16 ; புதியம்புத்தூரில் பைப்லைன் கேட்டு சாலை மறியல் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் பழைய பைப் லைன்களை அகற்றி புதிய பைப் லைன் 6 மாத காலமாக பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததை கண்டித்து வண்டிமலைச்சியம்மன் கோவில்தெரு, நடுத்தெரு மற்றும் கீழத்தெரு பொதுமக்கள் திடீர் சாலைமறியலில்; ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக புதிய குடிநீர் இணைப்பு வருவதாக கூறி அனைத்து பைப் லைன்களும் துண்டிக்கப்பட்டு ஒரே இடத்தில் தண்ணீர் டங்குகளின் 20 நல்லிகள் வைத்து தண்ணீர் பிடித்துக்கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் வண்டிமலைச்சியம்மன் கோவில்தெரு, நடுத்தெரு மற்றும் கீழத்தெரு ஆகிய இடங்களில் கடந்த 6 மாதகாலமாக புதிய குடிநீர் இணைப்பிற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் பொதுமக்கள் சாலையை கடந்து சென்று தண்ணீர் எடுப்பதால் இதுவரை இரண்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதுதெடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலிருந்த நிலையில் இன்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரி; பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக புதிய குடிநீர் பைப் லைன் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய லைன் போடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இதனால் மறியல் கைவிடப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo