Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வரலாறு ;மொத்த வாக்குச்சாவடிகள் 257

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வரலாறு ;மொத்த வாக்குச்சாவடிகள் 257



ஓட்டப்பிடாரம் 2019 ஏப்ரல் 21 ;தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, ஓட்டப்பிடாரம் ஆகும்.
ஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் சைவ வெள்ளாளர் குலத்தை சார்ந்த வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியானது..... மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசரடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்புலிங்காபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள், உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், புதுக்கோட்டை செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள், மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்),சங்கரப்பேரி மற்றும் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்), ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி,  வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு போன்ற ஊர்கள் அடங்கும்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு ;
2016 ஆர். சுந்தர்ராஜன் அதிமுக
2011 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம்
2006 P.மோகன் அதிமுக 39.34
2001 A.சிவபெருமாள் அதிமுக 43.30
1996 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 27.32
1991 S.X.ராஜமன்னார் அதிமுக 66.28
1989 M.முத்தய்யா திமுக 31.69
1984 R.S.ஆறுமுகம் இ.தே.கா 67.89
1980 M.அப்பாதுரை இந்திய கம்யூனிச கட்சி 52.11
1977 O.S.வேலுச்சாமி இ.தே.கா 41.51
வாக்காளர் எண்ணிக்கை ;  தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,ஆண்கள் ;1,150,80,பெண்கள் 1,18,75                                                                                                                        ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 65 வாக்குச்சாவடிகள்,கயத்தாறு தாலுகாவில் 9 வாக்குச்சாவடிகள்,திருவைகுண்டம் தாலுகாவில் 50 வாக்குச்சாவடிகள், தூத்துக்குடி தாலுகாவில் 133 வாக்குச்சாவடிகள் உள்ளன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo