Onetamil News Logo

ஒட்டப்பிடாரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்; வீரன் சுந்தரலிங்கம்  248வது பிறந்த தினவிழா ;அமைச்சர் பங்கேற்பு 

Onetamil News
 

ஒட்டப்பிடாரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்; வீரன் சுந்தரலிங்கம்  248வது பிறந்த தினவிழா ;அமைச்சர் பங்கேற்பு 


                ஓட்டப்பிடாரம் 2018 ஏப்ரல் 16 ;சுதந்திரப் போராட்ட வீரர்; வீரன் சுந்தரலிங்கம்  248வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ்  தலைமையில் கவர்னகிரியில் நடைபெற்ற விழாவில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கவர்னகிரி வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ்  தலைமையில் நடைபெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாவில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ , அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று (16.4.2018) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் சமூக நலத்துறையின் சார்பில் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன்  ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் என ரூ.10,50,000/- க்கான காசோலையினையும், மகளிர் திட்டத்தின் மூலம் 18 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ. 10 ஆயிரம் என ரூ.1 இலட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலையினையும், பணிபுரியும் பெண்கள் 10 பேருக்கு தலா ரூ.25,000/- மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 40 பயனாளிகளுக்கு விபத்து மற்றும்  இறப்பு உதவித்தொகைக்கான ரூ.10,15,000/- க்கான காசோலையினையும், 14 பயனாளிகளுக்கு ரூ.3,22,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம்  110 பயனாளிகளுக்கு ரூ.28,17,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ  பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தியாகிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி அவர்களும், தனது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய மகாகவிபாரதியாரும், இம்மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள். இது போன்று வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் வெள்ளையத்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் போன்றார் வரிசையில் வீரன் சுந்தரலிங்கமும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் வெள்ளையனை எதிர்த்து போரிட்டார். வீரத்தளபதி சுந்தரலிங்கம் தனது வீரவாளை உருவி நான் உயிரோடு இருக்கும்வரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை தகர்க்கவோ, எதிரிகளை உள்ளே விடவோ ஒருபோதும் நடக்க விடமாட்டேன் என்று தனது வாளின் மீது சத்தியம் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை காப்பதற்காகவே தன் உயிரை மாய்த்து வீரவரலாற்றில் இடம் பெற்றார். வீரன் சுந்தரலிங்கம் 248 ஆண்டுகளாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அவருடைய வீரமும், சுதந்திரப்போராட்ட போர்குணமும், தியாகமும் ஆகும். போர் மூலமாகவும், அகிம்சை மூலமாகவும், வணிகத்தின் மூலமாகவும், எழுத்தின் மூலமாகவும் இப்படி பல விதமாக நம்மாவட்டத்தில் போராடி விடுதலையை நம் தலைவர்கள் பெற்;றுத்தந்துள்ளார்கள். 
இந்திய வரலாற்றில் முதல் இந்திய சுதந்திரப்போர் 1857-ல் வங்கதேசத்தில் ஆரம்பித்தது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான முதல் சுதந்திரப்போர் 1799-லே பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஆரம்பித்து விட்டது. மேலும், இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதல் தற்கொலைப்படையினராய் உயிர்த்தியாகம் செய்தவர் வீரன் சுந்தரலிங்கம் ஆவார். வீரபாண்டிய கட்டபொம்மனும், வீரன் சுந்தரலிங்கமும் சாதி சமய வேறுபாடு இன்றி சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
 
 
 
தமிழ்நாடு அரசு தியாகிகளை கவுரவிக்க இதுபோன்ற அரசு விழாக்களை எடுத்து வருகிறது. சுதந்திரத்தின் மதிப்பை நமது வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீரத்தினை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்;க வேண்டும் என்பதற்காக அரசால் தியாகிகளுக்கு மணிமண்டபங்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பெற்ற சுந்திரத்தை போற்றும் வகையில் வருங்கால இளைஞர்கள் திகழ வேண்டும். வீரர் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாவினை சிறப்பிக்கின்ற வகையில் அடுத்த வருடம் அன்னாரது பிறந்த நாள் விழாவில் வீரர் சுந்தரலிங்கம் அவர்களின் வரலாற்றினை இன்றைய சமுகத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் அடங்கி தொகுப்புகள் மற்றும் பொருட்காட்சி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  என  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ், தெரிவித்ததாவது:
      தூத்துக்குடி மாவட்டம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய மாவட்டமாகும். சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி அவர்களும், தனது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய மகாகவிபாரதியார், இந்தியாவில் முதல் சுதந்திர போராட்டத்தை தொடங்கி வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் வெள்ளையத்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் போன்றார் வரிசையில் வீரன் சுந்தரலிங்கமும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் வெள்ளையனை எதிர்த்து போரிட்டான். வீரத்தளபதி சுந்தரலிங்கம் தனது வீரவாளை உருவி நான் உயிரோடு இருக்கும்வரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை தகர்க்கவோ, எதிரிகளை உள்ளே விடவோ ஒருபோதும் நடக்க விடமாட்டேன் என்று தனது வாளின் மீது சத்தியம் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை காப்பதற்காகவே தன் உயிரை மாய்த்து வீரவரலாற்றில் இடம் பெற்றார்.
      தமிழக அரசு சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர்களையும், மொழி அறிஞர்களையும் கௌரவிக்கும் விதமாக அவர்களின்  நினைவாக மணிமண்டபங்கள் எழுப்பப்பட்டு  அவர்களது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக வருடந்தோறும,; கொண்டாடப்பட்டு வருகிறது.  நமது தூத்துக்குடி மாவட்டம் நாட்டுக்காக உழைத்த சுதந்திரப்போராட்ட வீரர்;களை அதிகமாக உருவாக்கி தந்த மாவட்டம். நமது மாவட்டத்திலிருந்து பெரும்பாலானோர் சுதந்திரப்போரட்டத்தில்; ஈடுபட்டு தங்களது உயிரை துறந்துள்ளனர்.  அவர்களில் பலர் தேசத்தலைவராகவும் உயர்ந்துள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் சி.பொன்ராஜ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, கோவில்பட்டி கோட்டாச்சியர் பி.அனிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், மாவட்ட சமூக நல அலுவலர் கு.தனலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் டி.ஜாண்சன் தேவசகாயம், வட்டாட்சியர் (ச.பா.தி) ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.முத்துக்குமார், மு.சிவபாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo