Onetamil News Logo

மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளில் வீட்டு இணைப்பு பெறாத தெருக்கள் இருந்தால்உடனடியாக தெரியப்படுத்திட பொதுமக்களுக்கு P.கீதாஜீவன் M.L.A வேண்டுகோள்

Onetamil News
 

மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளில் வீட்டு இணைப்பு பெறாத தெருக்கள் இருந்தால்உடனடியாக தெரியப்படுத்திட பொதுமக்களுக்கு P.கீதாஜீவன் M.L.A வேண்டுகோள்


தூத்துக்குடி 2020 அக் 17 ; மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளில் வீட்டு இணைப்பு பெறாத தெருக்கள் இருந்தால்உடனடியாக தெரியப்படுத்திட பொதுமக்களுக்கு P.கீதாஜீவன் M.L.A வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்திய நேரத்தில் சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திரமரப்பட்டி ஆகிய 5 ஊராட்சிகள் சோ்க்கப்பட்டன.
இந்தப் பகுதிகளில் அனைத்து தெருக்களுக்கும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்சமயம் பெரும்பான்மையான பகுதிகளில் வீட்டுகுடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதும் இதில் சிலபகுதிகள் விடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தங்கம்மாள்புரத்தில் இரண்டு தெருக்கள், பாலையாபுரத்தில் இரண்டு தெருக்கள், மடத்தூா் அருந்ததியா் காலனி ஆகிய பகுதிகளுக்கு வீட்டு இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக அந்தப்பகுதி மக்கள் என்னிடம் நேரில் கோரிக்கை வைத்ததின் பேரில்நான் அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி கருப்புகுழாய் பதிக்க ஏற்பாடு செய்து இப்பொழுது வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.கீழ அலங்காரதட்டு, கல்வாரிநகா் பகுதியில்வீட்டு இணைப்பு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறினார்கள். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
இதுபோல மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட ஊராட்சிபகுதிகளில் ஏதாவது ஒருதெருவில் வீட்டுகுடிநீா் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது இணைப்பு கொடுத்தும் குடிநீா்வரமால் இருந்தாலோ அதுபற்றிய விபரத்தை பொதுமக்கள் என்னிடம் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரியப்படுத்தினால், உடனடியாக தீா்வுகாணப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தூத்துக்குடி தொகுதி முழுவதிலும் குடிநீா் விநியோகம் சரியாக இல்லாதிருந்தால் அதன் விபரத்தையும் எனக்கு தெரியப்படுத்துமாறு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo