தூத்துக்குடி புதிய விமான நிலைய இயக்குனராக P.சிவ பிரசாத் பொறுப்பேற்பு
தூத்துக்குடி புதிய விமான நிலைய இயக்குனராக P.சிவ பிரசாத் பொறுப்பேற்பு
ஆந்திராவில் உள்ள கடப்பா விமான நிலையத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த P.சிவ பிரசாத் அங்கிருந்து மாற்றப்பட்டு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் ஏற்கனவே இயக்குனராக பணியாற்றி வந்த N. சுப்பிரமணியன் பொறுப்புகளை ஒப்படைத்தார். N.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய கட்டுமான பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இந்த நிகழ்வின் போது மேலாளர் ஜெயராமன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.