Onetamil News Logo

திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை

Onetamil News
 

திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை 


பழனி 2018 ஏப்ரல் 15 ; திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார். 
திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பழனியை அடுத்த தொப்பம்பட்டி அப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் நாட்டுத்துரை. இவருடைய மகன் தங்கராஜ் என்ற நடராஜ் (வயது 35). விவசாயி, இவர் உறவினர் பெண்ணான அதே பகுதியை சேர்ந்த கவுதமி (22) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் நடராஜ், தந்தை வீட்டருகே உள்ள தோட்டத்து வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு நவனீஸ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. கவுதமி பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது நடராஜுக்கும், அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவருக்கு கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதையொட்டி தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவர் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி வீட்டில் நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதற்கிடையே அங்கு வந்த நடராஜின் உறவினர்கள், கணவன்-மனைவி இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கவுதமி விஷம் குடித்ததால் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நடராஜும் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo