Onetamil News Logo

உறவினர் என்றும் பாராமல் கைது செய்ய சென்ற தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் புகார் வழங்கிய 1 மணி நேரத்தில் வழக்கு பதிவு

Onetamil News
 

உறவினர் என்றும் பாராமல் கைது செய்ய சென்ற தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் புகார் வழங்கிய 1 மணி நேரத்தில் வழக்கு பதிவு  


திருநெல்வேலி 2020 செப் 8 ;தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் புகார் வழங்கிய 1 மணி நேரத்தில் வழக்கு பதிவு  வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருநெல்வேலி நீதிமன்றத்தில் முக்கிய பெரிய குற்றவாளி பாயாசம் என்பவர் சரணடைவதை கண்காணித்து பின்தொடர்ந்து, சென்றுள்ளார் எஸ்.ஐ.இசக்கிராஜா. இந்த நிலையில் பாயாசம் குற்றவாளியை பாதுகாப்பாக 50 வழக்கறிஞர்கள் ஆழைத்துச் சென்றுள்ளனர்.ஒரு குற்றம் செய்யப்பட்டவரை வழக்கில் இருந்து ஒருவரை காப்பாற்ற வழக்கறிஞர் ஒருவர் நெல்லை நீதிமன்றம் அருகே வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழங்கறிஞர்கள் உறவினர் என்றும் பாராமல் குற்றவாளியை கைது செய்ய சென்ற தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் புகார் வழங்கிய 1 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
நடந்தது என்ன ?                                                                                    பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பேச்சிமுத்து தேவர் என்ற பாயாசம் மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பேச்சுமுத்துவுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்குவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயற்சித்தார். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்துவை சரணடைய செய்ய நேற்று வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்தார். இதனை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, இசக்கிபாண்டியனின் செல்போனில் பேசி, சம்பந்தப்பட்ட வாலிபர் மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு வழக்கறிஞர் மறுத்தாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பந்தப்பட்ட வாலிபர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையறிந்த எஸ்.ஐ. இசக்கிராஜா நெல்லை நீதிமன்றம் அருகே காரில் பின் தொடர்ந்தார்  சென்று கொண்டிருந்தார். 
இதனை கண்டித்து நெல்லை நீதிமன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்.ஐ. இசக்கிராஜா மீது வழக்குப்பதிவு செய்தும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து அங்கு வந்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்.ஐ. மகேஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப்பதிவு செய்ததால்   அங்கிருந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo