மாப்பிள்ளையூரணியில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி கிங்மேக்கர் தேவராஜ் சிலம்பாட்ட பயிற்சி பள்ளியின் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் சிலம்ப போட்டி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாரம்பரிய சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாணவ மாணவிகள் பங்கு பெற்ற ஒற்றைகம்பு தனிதிறமை இரட்டை கம்பு வேல்கம்பு இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை உதவித்தொகை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் வழங்கினார்.
விழாவில் ஆசான் ஆதிலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இளைஞர் அணி கௌதம், ஆனந்த், கலை, பத்திரகாளியம்மன் கோவில் நாடார் நடுநிலைப்பள்ளி நிர்வாகி ஆறுமுகச்சாமி, ஊர்அம்பலம் ராமசாமி, ஊர் தர்மகர்த்தா பெரியசாமி, ஊர்தலைவர் ராமமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.