மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு ஊராட்சித் தலைவர் சரவணகுமார் கோரிக்கை
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் நாள்தோறும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார் தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியதாவது...:தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையுரணி ஊராட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதியின் படி தினசரி 3 டிராக்டர்களின் குப்பைகளை சேகரம் செய்து அகற்றி வருகின்றனர். தற்போது இந்த நிர்வாக அனுமதி பெறப்பட்டு 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது டீசல் கூலி உயர்வால் ஒப்பந்தக்காரர்கள் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பஞ்சாயத்து பகுதியில் மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதியாக இருப்பதாலும் குடியிருப்புகள் வெகுவாக இப்பகுதியில் உயர்ந்துள்ளதாலும் குப்பைகள் அளவு அதிகரித்துள்ளதுமேற்படி குப்பைகள் அகற்றும் ஒப்பந்த பணிக்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் டீசல், கூலி உயர்வால், ஒப்பந்தக்காரர்கள் பணியில் தொய்வு ஏற்படுகிறது ஆகையால் வாடகை மற்றும் கூலி ரூ.800 யிலிருந்து ரூ.1200 ஆக உயர்த்தி நிர்வாக அனுமதி வழங்க வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஊராட்சியில் 3 டிராக்டர்களில் ஒரு நாளைக்கு 12 நடையில் சேகரம் செய்யும் குப்பைகள் போக பெருகிவரும் மக்கள் தொகையால் குப்பைகள் தேங்கிய வண்ணம் உள்ளன. இதனை தடுக்க எட்டு நடைகள் கூடுதலாக சேர்த்து ஒரு நாளைக்கு 20 நடைகளாக குப்பைகளை அகற்ற அனுமதி வழங்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என மாப்பிள்ளை யூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தூத்துக்குடி எம்பி கனிமொழியிடம் கோரிக்கை வழங்கியுள்ளார்.. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி மன்றமாக மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்றம் விளங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து பகுதியில் தூய்மை பணி மிகவும் மோசமாக இருந்து வந்த நிலையில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்ற பிறகு அந்த கிராமம் முழுவதும் நாள்தோறும் குப்பைகள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் குப்பைகளை முழுமையாக அகற்றுவதற்கு ஏதுவாக செயல்படுத்தக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் தற்போது கனிமொழி எம்பி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.