குழந்தைகளின் ஆரோக்கியம்,நல்ல மற்றும் கெட்ட தொடுதல் பற்றி பெற்றோர்கள் குழந்தையுடன் பேச வேண்டும்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி இன்னர் வீல் கிளப் ஆஃப் திருச்சி மலைக்கோட்டை இணைந்து நேர்மறை பெற்றோர்கள் மற்றும்
பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். இன்னர் வீல் கிளப் ஆஃப் திருச்சி மலைக்கோட்டை தலைவர் கவிதா நாகராஜன், செயலர் மீனா சுரேஷ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலையில் குழந்தைகள் நல மருத்துவர் சுதர்சனா ஸ்கந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிகளைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பொருத்தமற்ற தகாத தொடுதல் பற்றி பலர் பேச தவிர்க்கின்றனர்.
ஒவ்வொரு கட்டத்திலும் உடல் பாதுகாப்பைப் பற்றி பேசுவதற்கு வயதுக்கு ஏற்ப எடுத்துரைக்க வேண்டும்.
பாலியல் துஷ்பிரயோக முயற்சிகளைத் தடுக்க, எதிர்கொள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிறுவயதிலே கூறவேண்டும். அதே நேரங்களில் குழந்தைகளிடம் நல்ல நேர்மறை நண்பராக இருங்கள்.
குழந்தைகளை புரிந்துகொள்ளுங்கள். மிக கண்டிப்புடன் இருந்தால் அச்ச உணர்வுடன் இருப்பார்கள்.
யாரும் புண்படுத்தும் செயலைச் செய்ய வரும் போது,மறுத்து பாதுகாப்பான சூழலுக்கு வரவும். அருகில் உள்ளவர்களிடம் கூறவும். 1098 சைல்டு லைன் கட்டணமில்லா தொலை பேசியில் புகாரளிக்கலாம்.
கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் கூறலாம். பெற்றோரிடமும் தயக்கமின்றி கூற வேண்டும் என்றார். மேலும் குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை ஊக்குவிக்க கூடாது சிறுவயதிலேயே செல்போன் பயன்பாடு அதிகரித்தால் அவர்களுக்கு சிந்திக்கக்கூடிய ஆற்றல் குறைந்து விடும். கற்றலில் குறைபாடு ஏற்படும் என்றார். முன்னதாக பள்ளி ஆசிரியர் லாரன்ஸ் வரவேற்க, நிறைவாக தேன்மொழி நன்றி கூறினார்.