Onetamil News Logo

ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம், குற்றவியல்  நடவடிக்கை - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் நேர்மையான அதிகாரி ஜெயசீலன் எச்சரிக்கை

Onetamil News
 

ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம், குற்றவியல்  நடவடிக்கை - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் நேர்மையான அதிகாரி ஜெயசீலன் எச்சரிக்கை


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ;ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம், குற்றவியல்  நடவடிக்கை - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் நேர்மையான அதிகாரி ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...........தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கட்டப்படும் சில கட்டிடங்கள் கட்டுமான விதிகளுக்கு முரணாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து கட்டப்படுவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. மாநகர பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் சாலை வரை சாய்வு தளம் அமைத்தல், தங்களது கட்டிடங்களின் முன்பு தெருவில் தற்காலிக அமைப்புகள் ஏற்படுத்தி பயன்படுத்துதல், செடிகள், கால்நடைகள் வளர்ப்பது போன்றவற்றுக்காக ஆக்கிரமிப்பு செய்வது நகரமைப்பு விதிகளின் படி தவறான செயலாகும். இது போன்ற செயல்களால் எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தெருக்களுக்குள் செல்ல முடியாமல் பெரும் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
இதனை ஒழுங்குபடுத்தும் வகையில் நகரமைப்பு விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாநகராட்சி மூலம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்தன. கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநகர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தினசரி கண்டறியப்பட்டு உடனடியாக அளவுகள் குறியீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். 24 மணி நேரத்துக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் மறுநாளே மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவுத்தொகையை இரு மடங்காக கணக்கிட்டு அபராதமாக வசூலிக்கப்படுவதுடன் உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாநகராட்சி இடங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநகராட்சியால் எடுக்கப்படும் அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo