Onetamil News Logo

தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் டிஜிபி திரிபாதி மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு 

Onetamil News
 

தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் டிஜிபி திரிபாதி மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு 


சென்னை 2021 பிப்ரவரி 25 ;பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை அதிகாரியாக சிறப்பு டிஜிபி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் தாஸ் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
மேலும் தமிழக முதல்வர் கரூர் மற்றும் புதுக்கோட்டை ,சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு  பாதுகாப்புபணிக்கு சென்ற பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபனை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார் ராஜேஷ்தாஸ்.
குறிப்பாக  அண்மையில் புதுக்கோட்டையில்  நடந்த தமிழக முதல்வர் நிகழ்ச்சிக்காக ராஜேஷ் தாஸ் வந்த போது பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல் பிளாசா விற்கு சென்று எஸ்.பி நிஷா  பார்த்திபன் அவரை வரவேற்று புதுக்கோட்டை வரை அவரது காரில் சென்று விட்டு வந்துள்ளார். 
இதே போல் கரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் தாஸ் சென்றபோது அவரது காரில் எஸ்.பி நிஷா பார்த்திபனை அழைத்து சென்றுள்ளார். 
இதனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் கடந்த 22ஆம் தேதி சென்னை சென்று டிஜிபி திரிபாதி மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் பற்றி விசாரிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது அரசு. ஏடிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி உளிட்ட 6 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
               எஸ்பி நிஷா பார்த்திபன் சென்னை சென்ற தகவலை திருச்சி ஐஜி ஜெயராமன், திருச்சி டிஐஜி ஆனிவிஜயா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்காத பெரம்பலூர் எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா அதிரடியாக  நேற்று பணிமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo