சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு பல்வேறு விதிமுறைகளுடன் அனுமதி
கேரளா 2020 அக்டோபர் 31 ;சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு பல்வேறு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு நவம்பர் 15ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறது.டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை மகரவிலக்கு பூஜைக்கு நடை திறந்திருக்கும்..
டிசம்பர் 26ம் தேதி தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடைபெறும் ,ஜனவரி 14ம் தேதி மகரவிலக்கு பூஜை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
வாரத்தின் முதல் 5நாட்கள் 1000 ஐயப்ப பக்தர்கள் அனுமதி வழங்கப்படும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2ஆயிரம் பக்தர்கள் அனுமதி,கோரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் காட்டப்படவேண்டும்.
சபரிமலையில் பணியாற்றும் அனைவருக்கும் கோவிட்-19 சான்றிதழ் கட்டாயம்
சிறிய வாகனங்கள் பம்பா வரை அனுமதி,பெரிய வாகனங்கள் நிலக்கல் வரை அனுமதிக்கப்படுகிறது.
நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய இடங்களில் குளியலறை மற்றும் கழிப்பறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பம்பா நதியில் குளிக்க அனுமதி இல்லை, பக்தர்கள் செயற்கை மழையில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சன்னிதானத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை,கோவிட் 19 முழுமையான விதிமுறைகளை பின்பற்றப்படும் இவ்வாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.