தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி,மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பேட்டி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படு உள்ளதாக கூறியுள்ளார்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும் , பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வேதாந்தா நிறுவனம் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது..
இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மே 4ஆம் தேதி விசாரித்தது..
இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்..
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது..
கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டுள்ளது ..
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம் குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆலை பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்..
இந்த குழுவில் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 பேர் இருப்பார்கள். ஆலை பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும். கழிவுகளை அகற்றும் பணியின்போது 24 மணிநேரமும் பாதுகாப்புப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள்..ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் அகற்றம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு கூறினார். ``````