திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்
தூத்துக்குடி 2020 ஜூலை 12 ;திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனது மென்மையான குரலால் , தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “காந்தக்குரல் கொண்டவர் ” என அழைக்கப்படுகிறார்.
கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் திரைப்படத்துறையில் இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற 17 மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார்.சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.