Onetamil News Logo

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவியில் விஷம் வைத்து தாய் மகள் கொலை, போலீசார் புலன் விசாரணை

Onetamil News
 

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவியில் விஷம் வைத்து தாய் மகள் கொலை, போலீசார் புலன் விசாரணை


கோவில்பட்டி 2021 அக்டோபர் 13 ;கோவில்பட்டியில் விஷம் கலந்த சிக்கன் கிரேவியில் சாப்பிட்டுவிட்டு குளிர் பானம் அருந்திய தாய் மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் என்று பரபரப்பை ஏற்படுத்திய அந்த நிகழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு இருக்கிறது அந்த உணவில் விஷம் கலந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
        தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த இளங்கோவன் - கற்பகவல்லி தம்பதிக்கு சண்முகபாண்டி என்ற மகனும், தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு தனியார் உணவகத்தில் இருந்து சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார் கற்பகவல்லி.,

பின்னர் வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் சேர்த்து, அவரும் அவரது மகளும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் லேசான வயிறு எரிச்சல் ஏற்பட்டதால், அருகில் உள்ள பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இளங்கோவனின் வீடு, குளிர்பானம் வாங்கிய பெட்டிக்கடை மற்றும் சிக்கன் கிரேவி வாங்கிய உணவகம் ஆகியவற்றில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தாய்-மகள் சாப்பிட்ட சாப்பாடு, குளிர்பானம் ஆகியவற்றை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
        போலீஸ் விசாரணையில் இந்த குடும்பத்தில் பல்வேறு குழப்பங்களும் சச்சரவுகளும் இருந்ததாகவும் இதனால் வீட்டில் உள்ள நபர்கள் விஷம் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது இது குறித்து மிகப்பெரிய விசாரணையானது நடைபெற்று வருகிறது ஆனால் உணவில் விஷம் கலந்திருப்பது உண்மையாகும் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo