Onetamil News Logo

காவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை  போலீஸ் கைது  செய்தது.   

Onetamil News
 

காவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை  போலீஸ் கைது  செய்தது.   


சாத்தான்குளம் 2020 ஜூலை 1:சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி முக்கிய குற்றவாளியை கைது செய்தது.சாத்தான்குளம் வழக்கில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்  ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.   
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குள காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இறந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி காவல் துறை இன்று பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் ரகு கணேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இந்த வழக்கு விசாரணையை இன்றுதான் சிபிசிஐடி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த அச்சத்துடனேயே இருந்தார். அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர். வாக்குமூலம் அளித்த ரேவதி கடைசியில், வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது” என்று நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த கருத்தும் பதிவிடாமல் இருந்த இயக்குநர் வெற்றிமாறன், நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.அதேபோல் ஜி.வி.பிரகாஷ், நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாக்குமூலம் அளித்த காவலர் ரேவதியை பாராட்டி வருகின்றனர்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo