Onetamil News Logo

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணி ;பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் 

Onetamil News
 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணி ;பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் 


திருச்செந்தூர், நவ. 5 ;
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
                                                         
 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் வழிப்பாட்டு ஸ்தலங்கள், பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள வழிப்பாட்டு ஸ்தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் சாத்தான்குளம் டி.எஸ்.பி. (பொறுப்பு) பாலச்சந்திரன் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோயில் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் காமாட்சி சுந்தரம், சின்னத்துரை, குமாரசாமி, கார்த்திக், செந்தில்வேல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
                                                                                                                                               டிச. 6ம் தேதியை முன்னிட்டு கூடுதலாக  தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. தலைமையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் பட்டாலியன் போலீசார் 40 பேர் தீவிரப்பு பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பிரதான வழிகளில் ஏற்கனவே நிரந்தரமாக மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வழியாக செல்லும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கூடுதலாக திருச்செந்தூர் & உடன்குடி மற்றும் திருச்செந்தூர் & ஆறுமுகநேரி இடையே வாகனத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo