Onetamil News Logo

தூத்துக்குடி அருகே தனிப்பிரிவு காவலர் காட்டுக்குள் தற்கொலை ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே தனிப்பிரிவு காவலர் காட்டுக்குள் தற்கொலை ;பரபரப்பு 


திருச்செந்தூர் - 2020 அக்டோபர்  1: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் உடன்குடி அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பிள்ளையார்பெரியவன் தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் செல்வமுருகன் (வயது 43). இவர் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அருணா (42). இவர்களுக்கு கமலேஷ் (18), அகிலேஷ் வர்ஷன் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.செல்வமுருகன் நேற்று  காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர், உடன்குடி பஜாருக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் உடன்குடி-செட்டியாபத்து ரோடு கூழையன்குண்டு காட்டுப்பகுதியில் பனை மரத்தின் அடியில் செல்வமுருகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தின் அருகே விஷ பாட்டிலும் கிடந்தது. அவரது மோட்டார் சைக்கிளும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி, குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில் செல்வமுருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இறந்து கிடந்த செல்வமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo