Onetamil News Logo

பதை பதைக்கும் அழுகை வீடியோ பரவல் ; பேஸ்புக் மூலம் பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் ;பொள்ளாச்சியில்100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வாலிபர்கள்

Onetamil News
 

பதை பதைக்கும் அழுகை வீடியோ பரவல் ; பேஸ்புக் மூலம் பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் ;பொள்ளாச்சியில்100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வாலிபர்கள்


பொள்ளாச்சி 2019 மார்ச் 12 ;பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பழகி சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.                                                                                                                                           பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.
                                                                                                                          பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு , சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி அவரது தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் சிறைக்கு சென்று வழங்க உள்ளனர்.
                                                                                                                                 இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் என தகவல் வெளியானது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo