Onetamil News Logo

அனைத்து சங்க சமய அரசியல் தலைவர்கள் ரோல் மாடல்களாக இருக்கவேண்டும்,பொள்ளாச்சி சம்பவம் தமிழ் இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது

Onetamil News
 

அனைத்து சங்க சமய அரசியல் தலைவர்கள் ரோல் மாடல்களாக இருக்கவேண்டும் ;பொள்ளாச்சி சம்பவம் தமிழ் இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது


கோவை 2019 மார்ச் 15 ; பொள்ளாச்சியில் நடந்திருக்கக் கூடிய சம்பவம் தமிழ் இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது .உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.
எல்லோரும் நினைக்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்களுடைய வீடியோவை வெளியிட்டு அதையும் கூட தங்களுடைய சுயலாபத்திற்காக அரசியலுக்காக பயன்படுத்துவது காட்டுமிராண்டித்தனமான செயல் இதை வன்மையாக கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும்  .
பெண்களை தாயாய் ,தங்கையாய்,  தோழியாய், தெய்வமாய் பார்க்க வேண்டிய சமுதாயம் பெண்களை காமப் பொருளாக காண்பதற்கு யார்? காரணம்
                                                                                                                         இளைஞர்களுடைய மனதில் அன்பை விதைப்பதற்கு பதிலாக விஷங்களை விதைத்தவர்கள் யார்? .நாட்டில் ஜாதியை ஒழிக்கிறேன் என்கின்ற விதமாக ஜாதி மோதல்களை உருவாக்கியது யார்?
                                                                                                          நல்லெண்ணங்களை விதைப்பதற்கு பதிலாக கெட்டதை விதைத்தார்கள் .பண்பை வளர்ப்பதற்கு பதிலாக குடியை வளர்த்தார்கள் .நல் ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக கெடுதியை கற்றுக் கொடுத்தார்கள் .
                                                                                                                                    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்லிக் கொடுத்து கற்பழிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தவர் யார்? ஆட்சியாளர்கள் ரோல் மாடல் யார்? என்று  பாடம் படித்தவர்கள் பண்படுவதற்கு பதிலாக புண்பட்டு நல்லொழுக்கத்திற்குப் பதிலாக தீய ஒழுக்கங்களை  இவர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட காரணத்தினால் தமிழ்ச் சமுதாயம் தரங்கெட்ட சமுதாயமாக மாறிப் போனதற்கு காரணம் இவர்கள் விதைத்த விஷத்தில் இருந்து முளைத்த விஷச்செடிகள் தான்  என்பதை யாராலும் மறுக்க முடியாது .எதிர்காலத்தில் பொள்ளாச்சி போன்று எந்த ஒரு இடத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு ரோல் மாடல் முக்கியமாக வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo