Onetamil News Logo

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜின்  வீடியோ பொள்ளாச்சியில் வெளியாகியுள்ளது. 7 ஆண்டுகளாக ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் 

Onetamil News
 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜின்  வீடியோ பொள்ளாச்சியில் வெளியாகியுள்ளது. 7 ஆண்டுகளாக ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் 


கோவை 2019 மார்ச் 14 ; பார் நாகராஜ் பாலியல் புகார் தொடர்பாக தற்போது 4 புதிய வீடியோக்கள் பொள்ளாச்சியில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோக்களில் ஒன்றில் பார் நாகராஜ் பெண்களை பலாத்காரம் செய்கிறார். 

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிதாக 4 வீடியோக்கள் வெளியாகியுள்ளன.  அதில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜின் வீடியோவும் வெளியாகியுள்ளது. 7 ஆண்டுகளாக ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
                                                                                                                                                                                                            இந்த கயவர்களின் முகமுடியை கிழித்தெறிந்த பெண்ணின் சகோதரரை பார் உரிமை எடுக்கும் நாகராஜ் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார். பார் நாகராஜ் இந்த நிலையில் அதிமுக பிரமுகரான இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாலியல் பலாத்காரத்தில் பார் நாகராஜ்-க்கும் தொடர்பிருக்கிறது என கூறிய மக்கள் இவரது பாரை அடித்து நொறுக்கினர். பார் நாகராஜ் பாலியல் புகார் தொடர்பாக தற்போது 4 புதிய வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோக்களில் ஒன்றில் பார் நாகராஜ் பெண்களை பலாத்காரம் செய்கிறார். போலீசார்  வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் நாகராஜ் த்தை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வீடியோக்கள் வெளியே வருவதையும் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டமும் வெடித்தன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo