Onetamil News Logo

தூத்துக்குடியில் ரேஷன் கார்டுகளை லாக் செய்ததால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பொங்கல் பொருள்கள் வாங்காமல் தவிப்பு கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

Onetamil News
 

தூத்துக்குடியில் ரேஷன் கார்டுகளை லாக் செய்ததால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பொங்கல் பொருள்கள் வாங்காமல் தவிப்பு கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?



தூத்துக்குடி      ஜன 11  ; தூத்துக்குடியில் ரேஷன் கார்டுகளை லாக் செய்ததால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பொங்கல் பொருள்கள் வாங்காமல் தவிப்புக்குள்ளாகினர்.                                                                                                                                                                                                                                                  இந்தியா முழுவதும்   மத்திய அரசால்    ATM  முன்னாள் வரிசையில் நின்றார்கள், இப்பொழுது  ரேஷன் கார்டுகளை  லாக் செய்ததால்  தாலுகா அலுவலகத்தில் வரிசையாக நிற்கும் அவலம் நடைபெறுகிறது.இங்கும் டோக்கன் வழங்குகிறார்கள். ரேஷன் பொருள்கள் முறையாக வாங்கியவர்கள் பாடும் திண்டாட்டம்,இவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் லாக் எடுத்தல் மட்டுமே வாங்க முடியும் என்று கூறுகிறார்கள்.ஒரு தம்பதியினர் லாக் செய்ததால் இன்று விடுமுறை போட்டு தாலுகா அலுவலகத்தில் நின்று வருத்தப்பட்டனர்                                                                    தூத்துக்குடியில்பத்தாயிரத்துக்கும்  மேற்பட்ட   ரேஷன் கார்டுகளை லாக் செய்ததால்  தொழிலாளிகள் பொங்கல் பொருள்கள் வாங்காமல் தவிப்புக்குள்ளாகினர்.                                                                                                                                                                                                                                          உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாமகளில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 958 நியாயவிலைக்கடைகளில் 424878 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு  மொத்தம் ரூ.1,91,19,510 மதிப்பிலான  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். என்று கூறினார்கள் ஆனால் வாங்க முடியாமல் பொது மக்கள் திணறுகின்றனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo