Onetamil News Logo

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை

Onetamil News
 

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகைஉலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல்
உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெய்யில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் - எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக் கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு பொங்கல் நாள் சிறப்பான நாளாகும் 
இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய தாய், பின் ஈன்றபோது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக்கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்லமுடியாது. ஆம்! தாய்மை உணர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இன்பம் உண்டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சி யின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” அல்லவா? வரப் புயர்ந்தால்தான் மற்றவை உயர முடியுமல்லவா? எங்கு சுற்றியும் உழவனின் காலடியை நோக்கித்தானே இவ் வுலகம் கிடக்கின்றது. அதனால்தான் உழவனின் உள்ளப் பூரிப்பைத் தன் பூரிப்பாக, உழவனின் புது வருவாயைத் தன் புது வருவாயாக, அவன் அகத்தின் புத்துணர்ச்சியைத் தன் புத்துணர்ச்சியாகப் புறமும் அகமும் புதுமை பொலிந்து நாடு கொண்டாடிடப் பொங்கல் புதுநாள் தோன்றியிருக்கிறது - தோன்றியிருக்க வேண்டும்.
உழவனின் பாட்டுக்கு ஒரு பெரும் துணையாய் நின்று உழைக்கும், அவனின் ஒப்பற்ற செல்வமாகிய ஆவினத்தை அவன்  எப்படி மறந்துவிட முடியும்? “சாரத்தைக் கொடுத்துவிட்டுச் சக்கையை உண்டு வாழும் உன் உழைப்பல்லவா, உன்னுடைய ஒத்துழைப்பல்லவா என்னை இன்று உலகம் கொண்டாடுகிறது! உன்னை நான் மறந்தால் உய்வேனா? உனது பாட்டால் அல்லவா நான் பெருமையடைகிறேன்! ஆகவே, நான் உன்னைப் போற்றுகிறேன், உன் நன்றியை ஒருநாளும் மறவேன்” என்கிறான் உழவன் ஆவினத்தை நோக்கி. அவனுக்குப் பின்பாட்டுப் பாடுகிறது உலகம் “மாட்டுப்பொங்கல்” வைத்து, ஏன்? அவன் வழிதானே உலகம் செல்லமுடியும்?
உழைப்போன் உறுபயன் காணும் நாள்! உலகம் மறு மலர்ச்சியடையும் நாள்! உழைப்புக்கு நன்றி செலுத்தும் பொங்கல்நாள்! சரி, இன்று உழவனின் நிலை என்ன? உழவு வேலையைச் செய்பவன், மன்னனுக்கு மன்னன் என்ற நிலைவேண்டாம். மனிதனாகவாவது மதிக்கப் படுகிறானா? மிருகத்தினிடத்துக் காட்டும் ஒரு பரிவு - விசுவாசம் - இரக்கவுணர்ச்சியைக்கூட அவனிடம் காட்டுவதற்குத் தயங்குகிறது இன்றைய உலகம். உழவுத் தொழில் செய் வோர் “சண்டாளர்கள்” என்று உறிஞ்சிப் பிழைக்கும் பார்ப் பனர்கள் எழுதி வைத்துக் கொண்டிருப்பது போல,
இன்று எவரும் எழுதும்படியான அநாகரிகக் காட்டு மிராண்டி நிலையில் இல்லாவிட்டாலும், அதற்கு மாறாக, “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்று முழங்கும்படியான நாகரிக நிலையில் இருக்கின்றார்கள் என்றாலும், உழவன் தன்னைத்தானே “சண்டாள” நிலையில் வைத்துக்கொள்ளும்படியாக அதாவது அறிவுத் துறையை அணுகும் வாய்ப்பில்லாதவனாய், அனுபவிக்கும் பண்பாடு அணுவளவும் அற்றவனாய்க் குறுகிய அளவுக்குள் குட்டையான உலகத்தில் கிடந்து உழல்பவனாய் இருந்து வருகிறான். (அவன் அப்படி இருந்து வரவேண்டியதை என்றைக்குமே சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள் கிறது). அதாவது, அறிவோ பொருளோ அவனை நெருங்க விடாதபடி, நெருங்கினாலும் பறிமுதல் செய்து விடும் படியாய் இருந்து வந்திருக்கிறது அவனைச் சுற்றிச் சூறை யாடும் சமுகம். இருந்தும் நயவஞ்சக நரிக்குணம் படைத்த சமுதாயம், பொங்கல் விழாவிலே பங்கு கொள்ளத்தான் செய்கிறது!)
உழவை, உழவுத் தொழில் செய்பவனைப் போற்றும் இந்த நாள் உண்மையில் பாவனையாகச் சடங்காகப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதே தவிர, மேலும் இந்தச் செய்நன்றி நாளுக்கு மிக மிக ஆபாசமான கதைகள் வேறு பின் நாட்களில் கற்பிக்கப் பட்டு இருக்கின்றனவே தவிர வேறு என்ன?
இன்று யார் யார் உழவுத்தொழிலைச் செய்கின்றார் களோ, சேற்றிலும் பனியிலும் கிடந்து சீரழிகின்றார்களோ அவர்களுக்கு நிலத்திலே உரிமையில்லை. ஒரு சிலருக்கு ஏதோ ஒரு அளவுக்கு உண்டு என்றாலும் அது இறங்கு முகமாக, நாளுக்குநாள் கரைந்துகொண்டுதான் வருகிறது. ஏன் இந்த நிலை? என்றைக்குமே இவர்களுக்கு நிலத்தில் உரிமையிருந்ததில்லையா? இல்லை என்று எவராவது கூற முன்வரமுடியுமா? காடு திருத்தி வயலாக்கிக் கழனியாகக் கண்டவன் - அவன் பரம்பரை - பின் சந்ததிக்கு எதனால் அந்தக்கழனியில் உரிமை இல்லாது போயிற்று? வயல் வரப்பையே மிதித்தறியாத, வாடாத மேனியருக்கு அந்தவுரிமை எப்படி வந்தது? ஏமாந்த காலத்தில் சிலர் ஏற்றங்கொண்டுவிட்டார்கள் என்றால், எப்படிச் சிலர் ஏமாற்றினார்கள், பலர் ஏமாந்தார்கள்? உரிமையற்ற உழவனுக்கு உழைப்பால் விளைந்த பெரும்பயன் எப்படி உவகையை உண்டாக்கும்? - உள்ளம் பூரிப்பால் பொங்கும்? எண்ணிப்பார்க்கும் இயல்பையுடையவன் என்றால் எரிமலையை அல்லவா அவன் உள்ளம் தோற்கடிக்கும் - தோற்கடிக்க வேண் டும்! “உழைத்தேன்! உறுபயன் கண்டேன்!!” என்று அவன் உள்ளம் ஆனந்தப்பள்ளுப் பாட முடியுமா இந்தப் பொங்கல் நாளில்?
இன்று உழவனின் நிலை என்னவோ, அதுதான் இந்நாட்டுப் பெரும்பாலோரின் நிலை! உழவன் எதனால், எப்போது, எப்படி, ஏமாற்றப்பட்டானோ, அப்படித்தான் மற்ற பெரும்பாலோரும் ஏமாற்றப்பட்டனர்! உழவன் நிலை - உழைப்போன் நிலை என்றைக்கு உயர்வு அடையுமோ, அன்றுதான் மற்றையோரின் நிலையும் வளம்பெற முடியும்! உழவனும், அவன் நிலையிலுள்ள மற்றையோரும் இப்பொங்கல் நாளில் இதற்கு மாற்றம் காணப் பொங்கல் நாள் பயன்படட்டும்.

 பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும். தமிழர் திருநாள் 

 தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது  
இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங் களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள்.
இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட் டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலை நிறுத்துபவைகளாகவே இருந்து வரு கின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பன-வெல்லாம் தமிழனை அடிமையாக்குவன-வாகவே இருந்து வரு கின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல் லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும்.
விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி,  சரஸ்வதி பூசை, தீபாவளி, விடுமுறை இல்லாத பண்டி கைகள் - கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி*, தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழ னின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடி கிறதா?
தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத - முக்காலத் திற்கும் ஏற்றநிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண் டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.
கிறித்தவர்கள் காலத்தைக்காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக்காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா  (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந் திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo