ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இரவாக மண் திருடுவதாக ஏழைத் தொழிலாளி குற்றச்சாட்டு
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 28 ;ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இரவாக மண் திருடுவதாக ஏழைத் தொழிலாளி குற்றச்சாட்டினார்.
ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள மணியாச்சி அருகே மகாராஜபுரம் என்ற சுந்தரராஜாபுரம் கீழத்தெரு அனந்தப்பன் மகன் ஏ.கருப்பசாமி கூறிய குற்றச்சாட்டு... எனக்கு சுந்தரராஜபுரம் பகுதியில் 1 ஏக்கர் இடம் இருக்கிறது அந்த பட்டா எண் ;85 சர்வே எண் ;448/3ஏ ;எங்கள் இடத்தில் இரவோடு இரவாக மண் அள்ளி கொண்டு சென்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு ;சட்டவிரோதமாக சவுடுமண் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில் 13 மாவட்டங்களில் சவுடு மண், கிராவல் மண் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக பட்டா நிலம் என்றாலும், சவுடு மண் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் வெளிப்படையாக உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை துளியும் மதிக்காமல், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சவுடு மண் திருடப்படுகிறது.பெரும்பாலும் இந்த மண், வெஸ்டாஸ் காற்றாடி ஆலை அமைப்பதற்கான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.இதுகுறித்து அவர்களிடம் கருத்து கேட்க போன் செய்தால் எடுக்கவில்லை,வெஸ்டாஸ் காற்றாடி ஆலை பொது மேலாளர் கிருஸ்ணப்பிள்ளை போனை எடுப்பது இல்லை,மேலாளர் வெங்கடேசன் எடுத்து பேசி அதைப்பற்றி தெரியாது என்று கூறினார்.இவர்களுக்கு அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி எம்.எல்.ஏ சண்முகையா மற்றும் பல நிர்வாகிகள் அனைவரும் உடந்தையாக இருப்பதால், மண் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இவை அனைத்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு துணையோடு நடத்தப்படுகிறது என ஓட்டப்பிடாரம் ர.ர.க்களே கூறுகிறார்கள்.
தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் மூலம், மண் திருடப்படுகிறது. இதற்கு, அப்பகுதி நலச்சங்கத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.