Onetamil News Logo

அறுவடை நெருங்கும்போது கொட்டிய அடைமழை ; விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீட்டை ஏக்கருக்கு 25 ஆயிரம் வீதம் இழப்பீடு தொகை  தமிழக அரசு வழங்கிட வேண்டும்

Onetamil News
 

அறுவடை நெருங்கும்போது கொட்டிய அடைமழை ; விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீட்டை ஏக்கருக்கு 25 ஆயிரம் வீதம் இழப்பீடு தொகை  தமிழக அரசு வழங்கிட வேண்டும்


தூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; அறுவடை நெருங்கும்போது கொட்டிய அடைமழைக்கு  வாழை கம்பு சோளம் கேழ்வரகு உளுந்து பாசிப்பயறு தட்டாம்பயறு எல் மற்றும் தானியங்கள் சம்பா நெல் பொன்னி பாசுமதி கருத்தருசி கதிர்களைப் பறிகொடுத்து தவிக்கும் செய்துங்கநல்லூர் கருங்குளம் புளியங்குளம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி உடையார் குளம் நாசரேத் குரும்பூர் அம்மன்புரம் ஆறுமுகநேரி ஆத்தூர் ஏரல் பெருங்குளம் பேட்மாநகரம் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீட்டை ஏக்கருக்கு 25 ஆயிரம் வீதம் இழப்பீடு தொகை  தமிழக அரசு வழங்கிட வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
டெல்டா மாவட்டங்களில் அறுவடை பருவத்தில் இருந்த சம்பா கதிர்கள், கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப் போய் விட்டன.  ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கரில் அல்ல, சுமார் 6 லட்சம் ஏக்கரில்  இந்த பேரழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களின் விவசாயிகள் கையில் இருந்ததையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். சோழ மண் சோறுடைத்து என்ற பொன்மொழிக்கு ஏற்ப, கழனி செழிக்கும் தஞ்சை மண்ணை வெள்ளக்காடாய் புரட்டி போட்டு விட்டது பெருவெள்ளம். 
இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் சம்பா கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டன. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா கதிர்கள் அழுகிப் போனதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
நாகை,மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு காத்திருந்த கதிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போயின.  இம்மாவட்டத்தில் உள்ள காவிரி கடைமடை பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி  உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலுமாக 60 ஆயிரம் ஏக்கரில் கதிர் சேதம் ஏற்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு கட்சி வேறுபாடின்றி, குறைந்தபட்சம்  ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் சரிவர பயிர்க் காப்பீடு வழங்கப்படவில்லை. காப்பீடு வழங்குவதில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பேதம் பார்க்கப்படுவது வேதனையிலும் வேதனை. 
எனவே அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதோடு, வேளாண் பணிகளைத் தொடர ஏதுவாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வங்கிகள் மற்றும்  கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக அரசை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo