திருமணமாணவருடன் கர்ப்பிணி மனைவி தப்பி ஓட்டம்,முத்தியாபுரத்தில் பரபரப்பு
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி முத்து என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார் இவர் விருது நகர் பகுதியைச் சேர்ந்த ஞானதீபா என்ற தனது காதலியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஞானதீபா 4 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி ஞான தீபா வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் அந்தோனிமுத்து தனது கர்ப்பிணி மனைவியை காணவில்லை என்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கடந்த 19ஆம் தேதி அந்தோணி முத்துவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் உங்கள் மனைவி, உங்கள் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பிரதீப் என்ற இளைஞருடன் காவல் நிலையம் வந்திருப்பதாக தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து அந்தோணி முத்து தனது குடும்பத்தாருடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஜெயசீலன் உனது மனைவியான ஞானதீபா,மேஜர் என்பதால் அவருடன் செல்ல விரும்புகிறார் எனக் கூறினார். பின்னர் ஞானதீபா மற்றும் பிரதீப்பை அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்தோணி முத்துவின் தந்தை மற்றும் அந்தோணி முத்து தனது மனைவியிடம் பேச முற்பட்டபோது அந்தோணி முத்துவை, காவல் ஆய்வாளர் பேச அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்தோணி முத்துவின் தந்தையை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே திருமணத்திற்கு பின் மனைவி ஐஸ்வர்யாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்தோணி முத்து மற்றும் மனைவியை கூட்டி சென்ற பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் புகார் மனு அளித்துள்ளனர். அப்போது தனது மனைவியை வேறு ஒரு நபருடன் சேர்த்து வைத்து அனுப்பிய காவல் ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோணி முத்து தரப்பில் கூறப்பட்டு பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை மீட்டு மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.