காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஆய்வு
காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் துறை ஒதுக்கீட்டின்படி நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு துறை ரீதியாக விண்ணப்பித்த 104 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 705 காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
மேற்படி தேர்வு எழுதும் மையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இத்தேர்வில் 104 பெண் விண்ணப்பதாரர்களுக்கு 78 பேரும், 601 ஆண் விண்ணப்பதாரர்களில் 485 பேரும் தேர்வில் கலந்து கொண்டனர். மொத்த 705 விண்ணப்பதாரர்களுக்கு 563 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 142 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.