Onetamil News Logo

ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.

Onetamil News
 

ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.


புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவம் உச்சி மாநாடு என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, பினாமி சொத்துக்களை கண்டறியும் கருவியாக ஆதார் உள்ளது என்றார். நிகழ்ச்சியில் மேலும் மோடி பேசியதாவது:- சிறந்த இந்தியாவை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக கிடைக்கும் அரசியல் விலையை செலுத்த தயாராக உள்ளேன். 
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இணை பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக இருந்த கருப்பு பணம், தற்போது முறையான அமைப்பின் கீழ் வந்துள்ளது. பினாமி சொத்துக்களை கண்டறியும் கருவியாக ஆதார் உள்ளது.  ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வெளிப்படத்தன்மையின் மிகப்பெரிய நடவடிக்கையாக ஜி.எஸ்.டி அமைந்துள்ளது” என்றார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo