Onetamil News Logo

தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையத்தில்  நூலகம் நடத்தி வருபவரை  இந்தியப் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி ;தொலைபேசியில் தமிழில் பேசி பாராட்டு 

Onetamil News
 

தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையத்தில்  நூலகம் நடத்தி வருபவரை  இந்தியப் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி ;தொலைபேசியில் தமிழில் பேசி பாராட்டு 


தூத்துக்குடி,2019 டிசம்பர் 3 ; தூத்துக்குடி மில்லர்புரத்தில் 'சுசில் குமார் பியூட்டி கேர்' என்ற பெயரில்  பொன்.மாரியப்பன் முடி திருத்தகம் கடையை நடத்தி வருகிறார்.
                    வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்க முடி திருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையத்தில்  நூலகம் நடத்தி வருபவரை  இந்தியப் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்துள்ளார்
உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று அன்னல் காந்தியிடம் கேட்டபோது ஒரு பெரிய நூலகம் அமைப்பேன் என்றாராம் உடலுக்கு புத்துனர்வு ஊட்ட உடற்பயிற்சி போல்  மூளைக்கு வேலை அளிப்பது  புத்தககங்கள் தான்  அந்தவகையில் வாசிப்பை அனைவரும்  நேசிக்க வைக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்.  தூத்துக்குடியில் முடி திருத்தும் கடை நடத்தும் பொன் மாரியப்பன் என்ற வாலிபர் குடும்ப சூழ்நிலை காரணமாக   8 ம் வகுப்பு வரை மட்டுமே மட்டுமே படித்த பொன் மாரியப்பன்   புத்தக வாசிப்பில் அலாதி ஆர்வம் கொண்டவர்,  புத்தகங்கள் வாசிக்கும் பழகத்தினை தன்னுடன் மட்டும் புதைத்து கொண்டு விடாமல் அதனை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க திட்டமிட்ட இவர் தன்  முடிதிருத்தும் கடையிலே ஒரு சிறிய நூலத்தினை  நடத்தி வருகின்றார்  இவரது கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் இந்த புத்தகங்களை எடுத்து வாசிக்க சொல்கிறார் மேலும்  அவர்கள் தங்கள் வாசிக்கும் புத்தகத்தில் உள்ள நல்ல கருத்துகளை அங்கு உள்ள பதிவேட்டில் பதியவைக்கும் நடவடிக்கயிலும் ஊக்கப்படுத்தி வருகின்றார் இவ்வாறு புத்தக வாசிப்பினை ஊக்கப்படுத்திவரும் பொன் மாரியப்பனை பற்றி அறிந்த பாரத பிரதமர் மோடி  மனதின் குரல்  என்ற நிகழ்ச்சிக்காக பொன் மாரியப்பனை தூத்துக்குடி மில்லர்புரத்தில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அழைத்து அங்கே உள்ள தொலைபேசியில்  தமிழில் பேசி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது மாரியப்பனை மிகவும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo